கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த பெண்ணின் ஏடிஎம் கார்டை திருடி ரூ.8.65 லட்சம் திருட்டு - அசாம் மாநில ஊழியர்கள் கைது….!

மருத்துவமனை அறையை சுத்தம் செய்வது போல உள்ளே சென்று, ஏடிஎம் கார்டை திருடியதும், அதை வைத்து  பல தவணைகளில் வைத்து பணத்தை எடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று, உயிரிழந்த பெண்ணின் ஏடிஎம் கார்டை திருடி ரூ.8.67 லட்சம் பணத்தை திருடிய அசாம் மாநில ஊழியர்களை பீளமேடு போலீசார் கைது செய்தனர். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தைசேர்ந்தவர் முருகசாமி. இவருடைய மனைவி யசோதா. கடந்த ஆண்டு மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டஇவர், சிகிச்சைக்காக கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், யசோதாவின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக முருகசாமி கடந்த சில தினங்களுக்கு முன் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது, யசோதாவின் வங்கி கணக்கை ஆய்வு செய்த போது, அதிலிருந்த சுமார் ரூ.8.5 லட்சம் ரூபாய் மாயமானது தெரியவந்தது. 

இதையடுத்து, முருகசாமி அந்த பணம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த 2021 மே மாதத்திற்கு பிறகு ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சந்தேகமடைந்த முருகசாமி உடனடியாக கோவை பீளமேடு போலீசில் புகார் அளித்தார். 

புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார், தனியார்மருத்துவமனையில் யசோதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது அறையை அடிக்கடி சுத்தம் செய்ய வந்ததாகக் கூறப்படும், அசாம் மாநிலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் அதுல் ஜோஷி மற்றும் ராஜ் பெங்கான் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 



இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த நிலையில், தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் யசோதாவின் ஏடிஎம் கார்டை திருடி அதிலிருந்து ரூ.8 லட்சத்து 67 ஆயிரத்து 710 ரூபாய் திருடியதை ஒப்புக்கொண்டனர். விசரானையில், யசோதா தனது ஏடிஎம் கார்டின் பின்னால் பாஸ்வேர்டை எழுதி வைத்திருந்ததாக தெரிகிறது. 

இதை அறிந்த இருவரும், அறையை சுத்தம் செய்வது போல உள்ளே சென்று அந்த ஏடிஎம் கார்டை திருடியதும், அதை வைத்துபல தவணைகளில் ஏடிஎம் கார்டை வைத்து பணத்தை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...