கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ தலைமையில் கல்வி, பூங்காக்கள்‌ மற்றும்‌ விளையாட்டு மைதானங்கள்‌ நிலைக்குழு தொடர்பான கூட்டம்..!‌

இதில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள உளவியல்‌ மாற்றங்களை சீர் செய்து நல்வழிப்படுத்தி உளவியல்‌ ஆலோசனை வழங்குதல்‌ குறித்து ஆலோசிக்கப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில்‌ கல்வி, பூங்காக்கள்‌ மற்றும்‌ விளையாட்டு மைதானங்கள்‌ நிலைக்குழு தொடர்பான கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ இன்று (07.04.2022) நடைபெற்றது.

துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா, கல்வி, பூங்காக்கள்‌ மற்றும்‌ விளையாட்டு மைதானங்கள்‌ நிலைக்குழு தலைவர்‌ நா.மாலதி ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



இக்கூட்டத்தில்‌, மாநகராட்சி பள்ளிகளின்‌ மேம்பாடு, கல்வித்தரம்‌ உயர்த்துதல்‌, பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பனிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்தோவுகளில்‌ மாநகராட்சிப்‌ பள்ளிகளில்‌ 100% தோச்சிக்கு உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளுதல்‌, பள்ளி மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கேற்ப போதுமான கழிவறை வசதிகள்‌ உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள்‌ ஏற்படுத்துதல்‌, மாணவ/மாணவியர்களுக்கு வாசித்தல்‌, எழுதுதல்‌, கற்றதைப் புரிந்து வெளிப்படுத்தும்‌ வகையில்‌ பயிற்சிகள்‌ வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்‌, மாணவ/மாணவியர்‌ எதிர்கால இலட்சியம்‌ சார்ந்து விருப்பம்‌ கோரி பெறப்பட்டு அவர்கள்‌ விரும்பும்‌ இலக்கினை அடைய ஊக்கப்படுத்தும்‌ வகையில்‌ சம்மந்தப்பட்ட பணிசார்ந்த இடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம்‌ சார்பில்‌ அழைத்துச்‌ சென்று பணி சார்ந்த விளக்கங்கள்‌ மற்றும்‌ இலக்கினை அடையும்‌ வழிமுறைகள்‌ ஆகியவற்றை விளக்கி கூறி ஊக்கப்படுத்துதல்‌, கொரோனா காலத்தில்‌ பள்ளிகள்‌ மூடப்பட்டதால்‌ பள்ளி கற்றல்‌ இடைவெளி காரணமாகவும்‌, தற்போதுள்ள தொழில்‌ நுட்ப கருவிகளின்‌ அபரிமிதமான பயன்பாடு காரணமாகவும்‌, மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள உளவியல்‌ மாற்றங்களை சீர் செய்து நல்வழிப்படுத்தி உளவியல்‌ ஆலோசனைகளைக்‌ கொண்டு பள்ளி மாணவர்கள்‌, பெற்றோர்கள்‌ மற்றும்‌ ஆசிரியைகளுக்கு ஆலோசனை வழங்குதல்‌ போன்ற ஆலோசனைகள்‌ மேற்கொள்ளப்பட்டன.

மேலும்‌, மாநகராட்சி பூங்காக்கள்‌ மற்றும்‌ விளையாட்டு மைதானங்களை மேம்படுத்திட நிலைக்குழு உறுப்பினர்கள்‌ மாநகராட்சி அலுவலர்களுடன்‌ சேர்ந்து நேரடி கள ஆய்வு செய்து உரிய பரிந்துரைகள்‌ வழங்குதல்‌, மாநகராட்சி பள்ளிகளில்‌ பயிலும்‌ 10 வயதிற்குட்பட்ட 4701 மாணவியர்களிடையே சேமிப்பு வழக்கத்தை ஏற்படுத்திட செல்வமகள்‌ சேமிப்பு திட்டத்தில்‌ இணைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போதுவரை 1470 மாணவியர்கள்‌ இணைந்துள்ளனர்‌. மீதமுள்ள இவ்வயது பிரிவு மாணவியர்‌ அனைவரையும்‌ இத்திட்டத்தில்‌ சோக்க தொடர்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளவும்‌ இக்கூட்டத்தில்‌ கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில்‌ மாநகரப்‌ பொறியாளர்‌ ராமசாமி, மாநகராட்சி கல்வி அலுவலர்‌ கே.பாண்டிய ராஜ சேகர்‌, கிழக்கு மண்டல செயற்பொறியாளா் ஜெயலட்சுமி, மாநகராட்சி மிருகக்‌ காட்சி சாலை இயக்குநர்‌, நிலைக்குழு உறுப்பினர்கள்‌, அனைத்து மண்டல உதவி ஆணையர்கள்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...