கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - முன்னாள் ஆசிரியரை தேடி கேரளா விரைந்தது தனிப்படை…!

பள்ளிக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வந்த அதிகாரிகள் பள்ளி முழுவதும் சோதனையிட்ட போது வெடிகுண்டு ஏதும் கிடைக்காததால் அது பொய்யான தகவல் என தெரியவந்தது.


கோவை: கோவை சூலூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ஆசிரியரைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் கத்தவாஞ்சாசவடி பகுதியை சேர்ந்தவர் கமலேசன் (39). இலங்கை தமிழர். இவர் கோவை ஆலாந்துறை பகுதியில் தங்கி சூலூர் முதலிபாளையம் பகுதியில் எல்லோ டிரெயின் ( Yellow Train) என்ற தனியார் பள்ளியில் ஜெர்மன் மொழி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கமலேசன் குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாகத் தெரிகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் அவரை உடனடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த கமலேஷ் அதே பள்ளியில் பணியாற்றிய வள்ளி என்ற முன்னாள் ஆசிரியருக்கு தொலைப்பேசியில் அழைத்து, இந்த பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வள்ளி உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் இதை கூறியுள்ளார். மேலும் சூலூர் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வந்த அதிகாரிகள் பள்ளி முழுவதும் சோதனையிட்டனர்.

அப்போது வெடிகுண்டு ஏதும் கிடைக்காததால் அது பொய்யான தகவல் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கமலேசன் கேரளாவிலிருந்து செல்போன் மூலம் அழைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசிரியரைக் கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...