கோவையில் வேலை கிடைக்காத விரக்தியில் பி.இ.பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!

சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



கோவை: கோவையில் வேலை கிடைக்காத விரக்தியில் பி.இ.பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் சுதர்சன் (30) பி.இ. பட்டதாரியான சுதர்சன் பல்வேறு இடங்களில் வேலை தேடி வேலை கிடைக்காததால், கடந்த 3-நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை தேடி வந்துள்ளார்.

இதற்காக ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மேன்ஷனில் அறை எடுத்து வசித்து வந்தார். ஆனால் அந்த தனியார் நிறுவனத்திலும் வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த சுதர்சன் அறையில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாணியம்பாடியில் உள்ள சுதர்சன் குடும்பத்தாருக்கும் தகவல் அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...