காதலன் மீது தகாத வார்த்தைகளால் பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் இளப்பெண்ணை தாக்கி, கார் கண்ணாடி உடைத்து அட்டூழியம் செய்த 'சைக்கோ காதலன்' உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே. புதூரை சேர்ந்த அஜித் (25). இவருக்கும் பிச்சனூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
அப்போது அஜித் தான் கூலி வேலைக்குச் செல்வதை மறைத்து கல்லூரியில் படிப்பதாகக் கூறியுள்ளார். அதனை மாணவி உன்மை என நம்பினார். நாளடைவில் 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்தநிலையில் அஜித் கூலி வேலைக்குச்செல்வதுமாணவிக்கு தெரியவந்தது.
மேலும் அஜித்தின் நடவடிக்கைகள்சரியில்லாததால் அந்த மாணவி அவரிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். ஆனால் அஜித் அந்த மாணவியைத் தினமும் பின்தொடர்ந்து வந்து காதலிக்குமாறு கூறிவந்தார்.
சம்பவத்தன்று அந்த இளம்பெண் கல்லூரிக்குச் செல்வதற்காக எட்டிமடை பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார். அப்போது அங்கு வந்த அஜித் அவரிடம் ஏன் என்னை காதலிக்க மறுக்கிறாய், என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அஜித் மாணவியைத்தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.
பின்னர் அஜித், மாணவியிடம் என்னைத் திருமணம் செய்து கொள், இல்லை என்றால், நீ தற்கொலை செய்து கொள், தற்கொலை செய்யவிட்டால் நான் உன்னைக் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறினார். உடனே அவர் மாணவியை அழைத்துக் கொண்டு கே.ஜி சாவடி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று புகார் அளித்தார். போலீசார் செல்போனில் அஜித்தைத் தொடர்பு கொண்டு போலீஸ் நிலையம் வரும்படி கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அஜித், கல்லூரி படிக்கும் தனது நண்பர் மனோ (22) என்பவரை அழைத்துக் கொண்டு மாணவியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு மாணவியின் வீடு புகுந்து அவர்கள் 2 பேரும்அங்கிருந்த மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றைச்சேதப்படுத்தினர்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்திலிருந்த மாணவியின் தந்தைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்துதப்பி சென்றனர்.
இதையடுத்து போலீசார் அஜித் மீது தகாத வார்த்தைகளால் பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அஜித் மற்றும் மனோ பதுங்கி இருந்த இடத்துக்குச் சென்றனர்.
அப்போது போலீசார் வருவதை பார்த்து அஜித் தப்பிச் சென்றார். அங்கு இருந்த மனோவை மடக்கிப் பிடித்தனர். அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அஜித்தையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
மேலும் பிடிபட்ட அஜித் மீது கஞ்சா உள்ளிட்ட 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. காதலிக்க மறுத்தால் இளம்பெண்ணையும், வீட்டையும் அடித்து நொறுக்கிய சைக்கோ காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.