மண் வள பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள்..!

நம்முடைய பாரம்பரிய கலையான களரியின் மூலமும், ஃப்ளாஸ் மாப் நடனத்தின் மூலமும் மக்களின் கவனத்தை ஈர்த்து மண் வள பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் கோவையில் பொதுமக்களுக்கு இன்று (ஏப்ரல் 6) விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை ரயில்நிலைய நுழைவு வாயில் முன்பு மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 40 ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் பங்கேற்றனர்.



அவர்கள் நம்முடைய பாரம்பரிய கலையான களரியின் மூலமும், ஃப்ளாஸ் மாப் நடனத்தின் மூலமும் மக்களின் கவனத்தை ஈர்த்து மண் வள பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.



இது தொடர்பாக ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் கூறுகையில், “மண் வளம் என்பது உலகளவில் வேகமாக அழிந்து வருகிறது. ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (UNFAO) தற்போது நாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், உலகில் மேற்பரப்பு மண்ணின் வளம் அடுத்த 60 ஆண்டுகளுக்குள் முற்றிலும் காணாமல் போய்விடும் என எச்சரித்துள்ளது.

மேலும், சர்வதேச விஞ்ஞானிகள் 2045-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 930 கோடியாக அதிகரித்து விடும் எனவும், அதேசமயம், உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்து விடும் அபாயம் உள்ளது எனவும் எச்சரித்துள்ளது.

அந்த நிலை உருவானால் உள்நாட்டு கலவரங்களும், பசி, பட்டினி பிரச்சினைகளையும் அதிகரிக்கும். ஆகவே, மண் வளத்தை காக்க நாம் இப்போதே களமிறங்க வேண்டும். உலக அளவில் மண் வளத்தை பாதுகாக்க அரசாங்கங்கள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தியும், இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 'மண் காப்போம்' என்ற உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு தொடங்கி உள்ளார்.

அதற்காக, அவர் லண்டனில் இருந்து தமிழ்நாடு வரை 3 கண்டங்கள் மற்றும் 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அத்துடன், உலகம் முழுவதும் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் பல்வேறு வழிகளில் இவ்வியக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே, நாங்கள் இந்நிகழ்ச்சியை இன்று கோவையில் நடத்தி உள்ளோம்.” என்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...