அமைச்சர் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லும் படமாக ‘அமைச்சர்’ திரைப்படம் இருக்கும்..!

கல்லூரி மாணவர்களே இயக்கி பணியாற்றியுள்ள இத்திரைப்படத்தில் அமைச்சர் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளதாக, கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் தெரிவித்தனர்.


கோவை: அமைச்சர் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லும் படமாக ‘அமைச்சர்’ திரைப்படம் உருவாகியுள்ளதாக, கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்ட சித்தோடு அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரியின் விசுவல் கம்யூனிகேசன் பிரிவு மாணவர்கள் தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம் ‘அமைச்சர்’.

நடிகர் ஜெய் ஆகாஷ், நடிகைகள் அக்‌ஷயா, தேவிகா, ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிகர் விஜயகுமார் நடித்துள்ளார்.

தேவா இசையில், மதன் கார்க்கி, கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இப்படத்தில், சர்வதேச விளையாட்டு வீரர் சவுந்திரராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி, கோயமுத்தூர் பிரஸ் கிளப் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் இந்நாள் மாணவர்கள் போஸ்டரை வெளியிட, கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். முழுக்க கல்லூரி மாணவர்களே இயக்கி, பணியாற்றியுள்ள இத்திரைப்படத்தின் மூலம் ஒரு அமைச்சர் நாட்டிற்கு என்ன நல்ல விசயங்களைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...