கோவை பாவனி நீர் பிடிப்பு பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் பலி - மது குடிக்க வனப்பகுதிக்கு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்…!

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தலை நசுங்கிய நிலையில் கிடந்த உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: மது குடிக்க வனப்பகுதிக்கு சென்ற இளைஞர் காட்டு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், பெத்திகுட்டை காப்புக்காடு அருகே பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக சிறுமுகை வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தலை நசுங்கிய நிலையில் கிடந்த உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர் சிறுமுகை ஆலக்கொம்பு, விஸ்கோஸ் காலணியை சேர்ந்த சேகர் என்பவரது மகன் நவீன்குமார்(27) என்பது தெரியவந்தது.

நேற்று இரவு அவர் மது அருந்துவதற்காக பவானிசாகர் நீர்ப் பிடிப்பு பகுதிக்கு சென்று குடித்து விட்டு, மீண்டும் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை நவீனை கீழே தள்ளி தலையில் மிதித்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்ததும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...