கோவையில் ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்: உணவருந்திய பணத்தை கேட்டதால் ஆத்திரம் அடைந்த இளைஞர் கும்பல்..!

உணவருந்திய பணத்தை கேட்டதற்கு உணவகத்தின் மீது காலி மது பாட்டில்களை எறிந்து தாக்குதல் நடத்திய 3-இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 6-நபர்களைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் உணவருந்திய பணத்தை கேட்டதற்கு உணவகத்தின் மீது காலி மது பாட்டில்களை எறிந்து தாக்குதல் நடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் தனியார் உணவகம் (ஸ்ரீ அபி ஹோட்டல்) ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த உணவகத்திற்கு பிரதீப்(22) என்ற அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் உணவருந்தச் சென்றுள்ளார்.

அவர் மது போதையிலிருந்ததாக கூறப்படுகிறது. அவர் 520 ரூபாய்க்கு உணவருந்தி விட்டு 500 ரூபாய் மட்டுமே பணம் கொடுத்துள்ளார். மீதி 20 ரூபாயைக் கேட்டதற்கு தன்னிடம் இல்லை என்றும் ஏன் இதை வாங்கிக் கொள்ள முடியாதா எனவும் கூறி உணவகத்தின் காசாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து உணவகம் மூடப்படும் போது அந்த இளைஞர் மேலும் சில இளைஞர்களைக் கனரக வாகனத்தில் அழைத்து வந்து காலி மதுபாட்டில்களை கொண்டு உணவகத்திற்குள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் உணவகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த உணவக உரிமையாளரின் காரையும் சேதப்படுத்தி உணவகத்திலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

இதில் காசாளர் பழனிச்சாமிக்குக் காயங்கள் ஏற்பட அவரை சக உணவக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து காசாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் சம்பவத்தில் ஈடுபட்ட பிரதீப்(22), ஸ்ரீகிருஷ்ணேஷ்வரன்(21), அஜித் குமார்(22) ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 6 நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...