கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் பாஜக கோவை மாநகர மாவட்ட பொறுப்பாளர் ஏபி முருகானந்தம் பாஜக கட்சிக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
கோவை: இன்று பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம் பாஜக வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தினத்தை முன்னிட்டு நாட்டில் பல்வேறு இடங்களில் பாஜக வினர் அவர்களது கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி காணொலி வாயிலாக பாஜகவினரிடையே உரையாற்றுகிறார்.

அதன் ஒரு பகுதியாகக் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பாஜகவினர் அவர்களது கட்சியின் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர். அதன்ஒரு பகுதியாகக் கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் பாஜக கோவை மாநகர மாவட்டபொறுப்பாளர் ஏபி முருகானந்தம் பாஜக கட்சிக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் பிரதமர் உரையைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு நடந்து சென்ற அவர் பாஜக கொள்கைகளைப் பொதுமக்களிடையே பரப்பிச் சென்றார்.
பின்னர் பிரதமரின் உரையைக் கண்டு களித்தார். இவருடன் கட்சி தொண்டர்கள் சிலர் கலந்து கொண்டனர்.