கோவையில் இரயில் மோதி  தொழிலாளி பலி - டீ குடிக்க சென்ற போது ஏற்பட்ட விபரீதம்…!

இன்று காலை கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் டீ குடிக்க சென்ற தொழிலாளி மீது இரயில் மோதி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: இன்று காலை கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் டீ குடிக்க சென்ற தொழிலாளி மீது இரயில் மோதி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நஞ்சுண்டாபுரம் மாரியம்மன் கோவில் வீதிபகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடிக்கச் சென்றார். பின்னர், மீண்டும் வீட்டிற்கு வர அங்கிருந்த இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக தெரிகிறது. 



அப்போது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர்பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ள பொதுமக்கள் போத்தனூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், கருணாநிதி உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காலையில் டீ குடிக்க கடைக்குச் சென்ற தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...