கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக பாஜக நிர்வாகியை தாக்கி கத்தியால் குத்திய, பாஜக பிரமுகர்கள் உட்பட அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக பாஜக நிர்வாகியை தாக்கி கத்தியால் குத்திய, பாஜக பிரமுகர்கள் உட்பட அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். பாஜக நெசவாளர் பிரிவு செயலாளராக உள்ளார். மேலும், கடந்த 11 ஆண்டுகளாக ராமநாதபுரம் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பாஜக உட்கட்சி தேர்தலில் ஜெயக்குமார் போட்டியிட கூடாது எனக்கூறி பாஜகவை சேர்ந்த கார்த்திக், முத்துக்குட்டி மற்றும் மேலும் இரண்டு பேர், ஜெயக்குமாரின் போட்டோ ஸ்டூடியோவிற்குள் புகுந்து சராமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர், அவரை கத்தியால் குத்தி தப்பிச் சென்றனர்.
இந்த காட்சிகள் ஸ்டூடியோவில்பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.இது குறித்து ஜெயக்குமார் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், தான் பாஜகவில் மாவட்ட நெசவாளர் அணி செயலாளராக இருந்ததாலும், தற்போது கட்சியில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், அதில் எந்த பதவிக்கும் போட்டியிடக் கூடாது, என தன்னை மிரட்டுவதாகவும், அதற்காக கார்த்திக், முத்துக்குட்டி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் அளித்த புகார் அடிப்படையில்,கார்த்திக், முத்துகுட்டி உள்ளிட்ட 4 பேர் மீது ராமநாதபுரம் போலீசார் 7 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.