கோவை எட்டிமடை பேருந்து நிழற்கூரையில் சுயநினைவின்றி மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு…!

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த அடையாளம் தெரியாத நபர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிக அளவு மது அருந்திவிட்டு சரியாக உணவு எடுக்காமல் இருந்ததே இறப்புக்கான காரணமாக கூறப்படுகிறது.


கோவை: கோவை பாலக்காடு சாலையில் உள்ள எட்டிமடை பேருந்து நிழற்கூரையில் நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சுய நினைவு இல்லாமல் கிடந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த அடையாளம் தெரியாத நபர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிக அளவு மது அருந்திவிட்டு சரியாக உணவு எடுக்காமல் இருந்ததே இறப்புக்கான காரணமாக கூறப்படுகிறது.

இருப்பினும், எட்டிமடை கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் கே.ஜி சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர் யார்..? எப்படி இங்கு வந்தார்..? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...