கோவையில் நடைபெறவுள்ள 'பில்ட் டெக் மற்றும் வாட்டர் இன்டெக் கண்காட்சி': 100 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் என்று கொடிசியா அமைப்பினர் நம்பிக்கை

11வது பில்ட் டெக் மற்றும் 2வது வாட்டர் இன்டெக் கண்காட்சிகள் வருகிற 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை 4 நாட்கள், கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாவட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான கொடிசியா சார்பில் ஆண்டுதோறும், "பில்ட் டெக், வாட்டர் இன்டெக், அக்ரி இன்டெக்", போன்ற கண்காட்சிகள் நடைபெற்று வந்தன. இதன் மூலம் கோவைக்கு பல புதிய நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிக்கு வந்ததோடு, கோவையை சேர்ந்த நிறுவனங்களுக்கும் கணிசமான வர்த்தகம் கிடைத்து வந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எந்த கண்காட்சிகளும் நடைபெறவில்லை. தற்போது, கொரோனா கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டிற்கான 11வது பில்ட் டெக் மற்றும் 2வது வாட்டர் இன்டெக் கண்காட்சிகள் வருகிற 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை 4 நாட்கள், கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது.



இது தொடர்பாக, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, ஒரு லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கொடிசியா வளாகத்தின் 4 அரங்குகளில் இக்கண்காட்சி நடைபெற உள்ளதாகவும், இதில் பங்கேற்க முன்னணி நிறுவனங்கள் 460 ஸ்டால்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.



கடந்த முறை இன்டெக் கண்காட்சி மூலம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்ற நிலையில், இவ்வாண்டு கூடுதலாக வர்த்தகம் நடைபெறும் என நம்புவதாகவும், இக்கண்காட்சி மூலம் கோவையைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பலனடையும் என்று தெரிவித்தார். மேலும் கண்காட்சியில், ஜீரோ டிஸ்சார்ஜ் முறை, கட்டுமான தொழிலுக்கான கன ரக இயந்திரங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும், அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...