கோவை பாஜக உட்கட்சி பூசல்..! போட்டோ ஸ்டூடியோ உரிமையாளருக்கு கத்தி குத்து - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

கோவையில் பாஜக உட்கட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது எனக் கூறி, போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரை, அக்கட்சியினரே கடைக்குள் புகுந்து தாக்கியதுடன், கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: கோவையில் பாஜக உட்கட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது எனக் கூறி, போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரை, அக்கட்சியினரே கடைக்குள் புகுந்து தாக்கியதுடன், கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர், கோவை மாவட்ட பாஜக நெசவாளர் அணியில் செயலாளராக இருந்தவர். மேலும், கடந்த 11 ஆண்டுகளாக ராமநாதபுரம் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி அவரது ஸ்டுடியோவுக்கு வந்த பாஜகவை சேர்ந்த கார்த்திக் மற்றும் முத்துக்குட்டி ஆகிய இருவர், மேலும் இருவருடன் சேர்ந்து ஜெயக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும், கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த காட்சிகள் ஸ்டூடியோவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து ஜெயக்குமார் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், தான் பாஜகவில் மாவட்ட நெசவாளர் அணி செயலாளராக இருந்ததாலும், தற்போது கட்சியில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், அதில் எந்த பதவிக்கும் போட்டியிடக் கூடாது, என தன்னை மிரட்டுவதாகவும், அதற்காக கார்த்திக், முத்துக்குட்டி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

எனவே, தன்னை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பாஜக உட்கட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என அவர்கள் கட்சியை சேர்ந்த நபர்களே ஸ்டூடியோ உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...