மத்திய அரசின் பல திட்டங்களை எதிர்த்த திமுக அரசு சொத்துவரி உயர்வு மட்டும் மத்திய அரசு கூறியதால் உயர்த்தப்படுகிறது என கூறுவது ஏன்?- எஸ்.பி.வேலுமணி கேள்வி..!

100 ரூபாய் கொலுசைக் கொடுத்து விட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரக்கணக்கில் வரியை உயர்த்தி விட்டதாக கூறினார்.


கோவை: தமிழக அரசின் சொத்துவரி உயர்வைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சொத்துவரிஉயர்ந்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் சொத்துவரி உயர்வைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



எதிர்கட்சி கொரோடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், பெண்களுக்கு இலவச இரு சக்கர வாகனம் ஆகிய திட்டங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில் கண்டன சிறப்புரையாற்றிய எஸ்.பி.வேலுமணி, எத்தனையோ பொய்களை சொல்லி ஆட்சிக்கு திமுக வந்தது என்றும் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டதாகவும் கூறினார். 100 ரூபாய் கொலுசைக் கொடுத்து விட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரக்கணக்கில் வரியை உயர்த்தி விட்டதாக கூறினார்.



மக்கள் அந்த வரியை கட்டும் போதுதான் அதன் விபரீதம் புரியும் எனவும் தெரிவித்தார். மத்திய அரசு எது கூறினாலும் அதனை நிறைவேற்ற மாட்டோம் என கூறி வரும் திமுக அரசு இதை மட்டும் மத்திய அரசு கூறியதால் செய்தோம் என்று எவ்வாறு கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்?. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த ஆலோசனை மேற்கொண்டது என கூறிய அவர் ஆனால் அப்போதைய முதல்வர் (எடப்பாடி பழனிச்சாமி) ஒரு சதவீதம் கூட சொத்து வரியை உயர்த்த கூடாது என கூறி மக்களுக்கு நன்மை செய்தார் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி அதிமுக ஆட்சியில் பெண்களுக்காகக் கொண்டுவந்த தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் ரத்து செய்து விட்டதாகத் தெரிவித்தார். மேலும் கோவையில் 50 ஆண்டு காலங்களில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொண்டு வந்தோம் எனவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் பெரும்பாலும் முடிக்கப்பட்ட மேம்பாலம், கூட்டு குடிநீர், புறவழி சாலை பணிகளை தற்போதைய அரசு மெதுவாக்கி விட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் வெள்ளலூர் பேரூராட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்தலிலும் திமுக அரசுக்கு ஆதரவாக அலுவலர்கள் செயல்பட்டதாகத் தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதன்முதலில் புகார் கொடுத்தது பொள்ளாச்சி ஜெயராமன் தான் என்றும் ஆனால் அதனை அப்படியே மாற்றி விட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அப்போது திமுக கம்யூனிஸ்ட் உட்பட பலரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டார்கள் ஆனால் தற்போது நடைபெற்ற விருதுநகரில் நடைபெற்ற சம்பவத்திற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை என தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி சொத்துவரி உயர்வு, அதிமுக திட்டங்களை ரத்து செய்தது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். திமுக அரசு இந்த வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், கடந்த ஆட்சியில் கொண்டு வந்த பெண்களுக்கான திட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். மேலும் கோவையில் கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.



பெட்ரோல் டீசல் விலையைப் பொருத்தவரை பிற மாநில அரசு குறைத்த வரியை போல் இந்த அரசு வரியை குறைக்கவில்லை எனவும் தமிழக அரசும் மத்திய அரசும் விலையைக் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த சொத்துவரி உயர்விற்குமத்திய அரசு தான் காரணம் என திமுகவினர் கூறுகின்றனர் ஆனால் இதனை திமுக அரசு தான் உயர்த்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...