பணி நீக்கம் செய்வதை கண்டித்து, கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதை கண்டித்து, இன்று காலை மேற்கு மண்டல சுகாதார அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.


கோவை:கோவை மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், இன்று காலை மேற்கு மண்டல சுகாதார அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



கோவை மாநகராட்சி பணி புரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 7 பேரை பணியில் இருந்து நீக்கிய, சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளரை கண்டித்து, இன்று கோவை மேற்கு மண்டல அலுவலகம் முன்புதூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 



இது குறித்து பேசிய தூய்மை பணியாளர் ஒருவர்: "கடந்த ஐந்தாண்டு காலம் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், இன்றைக்கு பணிபுரிவதற்கு ஆட்கள் நிறைய இருப்பதால், உங்களுக்குஇங்கு வேலை இல்லை என்று மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளரும், சுகாதார மேற்பார்வையாளரும் தெரிவித்துள்ளனர். 

வேலையில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள இந்த 7 துப்புறவு பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்ககோரி இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், பணி நீக்கம் செய்யப்பட்டபணியாளர்களின் குடும்பங்களையும் கருத்தில் கொண்டு இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும்", என்று தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...