கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 11 யானைகள் உயிரிழப்பு - தமிழக அரசு அறிவித்த சிறப்பு குழு கோவையில் ஆய்வு

மூன்று ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு தன்னார்வலர் கொண்ட குழுவினர் இன்று கோவை தாணிக்கண்டியில், அவுட்டுகாய் கடித்து வெடித்ததில் உயிரிழந்த யானை இறந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 11 யானைகள் உயிரிழந்ததுள்ள சம்பவத்தை ஆய்வு செய்ய, சிறப்பு குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்த நிலையில், இன்று அந்த குழுவினர் யானை இறந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த 11 யானைகளில், அதிகளவு யானைகள் இளம் வயதுடையவை என்பது குறிப்பிடத்தக்கது. அதில், 2 யானைகள் இயற்கைக்கு முரணாக மின் வேலியில் சிக்கியும், அவுட்டு காய் வெடித்தும் உயிரிழந்தது, வனத்துறை மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டத்தில் 90 நாட்களில், 11 யானைகள் இறந்த சம்பவத்தை விசாரணை மற்றும் ஆய்வு செய்ய, கடந்த 31 ஆம் தேதி தமிழக அரசு மூன்று ஐ.எப்.எஸ் அதிகாரிகள், ஒரு தன்னார்வலர் அடங்கிய குழுவை நியமித்தது.

மேலும், இந்த குழு தமிழகம் முழுவதும், இயற்கைக்கு முரணாக உயிரிழக்கு யானைகள் குறித்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிடும், என தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில், அக்குழுவினர் முதல் பணியாக இன்று கோவை தாணிக்கண்டியில், அவுட்டுகாய் கடித்து வெடித்ததில் காயமடைந்த 10 வயது பெண் யானை உயிரிழந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...