கூட்டுறவுத்துறை நகைகடன் தள்ளுபடி: கோவை மாவட்டத்தில் 46,114 பயணிகளுக்கு, ரூ.192.67 கோடி மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி….!

கோவை மாவட்டத்தில் 46,114 பயனாளிகளுக்கு ரூ.192.67 கோடி மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி சான்றிதழை அந்தந்த கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் இவ்வாறு ரூ.6 ஆயிரம் கோடி அளவிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தமிழகம்

அதன்படி, தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திலேயே சுமார் 12 லட்சம் பயணிகளுக்கு ரூ.4,805 கோடிக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம்

இதில், கோவை மாவட்டத்தில் மட்டும், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், மற்றும் பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் 5 சவரனுக்கு உட்பட்ட கடன் பெற்று, அரசாணையில் உள்ள தகுதிகளையும் நிறைவு செய்துள்ள 46,114 பயனாளிகளுக்கு ரூ.192.67 கோடி மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு, நகைக்கடன் பெற்ற கூட்டுறவு வங்கி கிளைகளில் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், மொத்த எடை 5 பவுனுக்கு உட்பட்டு, கடன் பெற்றுள்ள தகுதியுடைய பயனாளிகள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு வங்கியை அனுகி கடன் தள்ளுபடி சான்றிதழினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...