'மூலப்பொருட்கள்' மற்றும் 'பெட்ரோல்' விலை உயர்வு எதிரொலி: கோவையில் 15-பம்ப்செட் தொழிற்சாலைகள் மூடல்..!

மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண விட்டால் எதிர்வரும் நாட்களில் மிக அதிக எண்ணிக்கையில் கோவையிலுள்ள பம்ப்செட் தொழில் நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படும்.



கோவை: இரும்பு, ஸ்டீல், காப்பர், அலுமினியம் உள்ளிட்ட பம்ப்செட் தயாரிப்புக்குத் தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் விலை மற்றும் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவையில் 15 பம்ப்செட் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தொழில் நகரான கோவை மோட்டார் பம்ப்செட் உற்பத்தியில் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் புகழ்பெற்று விளங்குகின்றது. வீடு, அலுவலகங்கள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பம்ப்செட் பல்வேறு மாடல்களில் செல்ப் பிரைமிங் (self priming), மோனோ பிளாக் (Mono Block), ஓபன் வெல் சப்மெர்சிபில் மோனோபிளாக் (open well submersible Monoblock), ஸ்டேஜ் மோனோபிளாக் (Stage Monoblock), போர்வெல் பம்ப் (Borwell Pump) என்பது உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாடல்களில் பம்ப்செட் தயாரிக்கப்படுகின்றன.

மூவாயிரம் குறு, சிறு தொழில் நிறுவனங்களும் 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழில் நிறுவனங்களும் பம்ப்செட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன . 0.5HP(Horse Power) முதல் 100 HPவரை பல்வேறு திறனுடைய பம்ப்செட் விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்தபட்சம் 3,000 ரூபாய் முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரூபாய்வரை மோட்டார் பம்ப்செட் விற்பனை செய்யப்படுகின்றன.

மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பம்ப்செட் தொழில் மிகுந்த நெருக்கடியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(SIEMA), தலைவர், கே.வி. கார்த்திக் கூறியதாவது:-



இரும்பு, ஸ்டீல், காப்பர், அலுமினியம், காஸ்டிங் உள்ளிட்டவை பம்ப்செட் உற்பத்திக்கு தேவைப்படும் முக்கிய மூலப் பொருட்கள் ஆகும். இத்தகைய மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வருகிறது 2020 மார்ச் விற்பனை செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விலையுடன் 2022 மார்ச் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இரண்டு மடங்குக்கு மேல் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளன.

தொழில் அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தபோதும் இன்றுவரை மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமாக மாறி வருகிறது. பம்ப்செட் உற்பத்திக்கு புகழ்பெற்ற கோவை மாவட்டத்தில் தொழில் துறையினர் மிகுந்த நெருக்கடியை எதிர் கொண்டுள்ளனர்.

50 தொழிலாளர்களுக்கும் கீழ் பணியாற்றிவரும் வரும் தொழிற்சாலைகளில் 15 தொழிற்சாலைகள் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் மூடப்பட்டுவிட்டன. அடுத்தபடியாக 100 தொழிலாளர்கள் வரை பணியாற்றி வரும் தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண விட்டால் எதிர்வரும் நாட்களில் மிக அதிக எண்ணிக்கையில் கோவையிலுள்ள பம்ப்செட் தொழில் நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படும்.

இதனால் தொழிலாளர்கள் பலர் வேலை வாய்ப்பு இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே தொழில் முனைவோரின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(KOPMA) தலைவர், மணிராஜ் கூறியதாவது:-



குறு, சிறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது. தொழில்துறையினர் ஜிஎஸ்டி வரி செலுத்த முடியவில்லை வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேல் குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் தங்கள் நிறுவனங்கள் செயல்படும் கட்டிடங்களுக்கு வாடகை கூட கொடுக்க முடிவதில்லை இத்தகைய சூழ்நிலையில் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பம்ப்செட் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிப்பதில் பெட்ரோல் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே பெட்ரோல் விலை இன்று 110 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனுடைய தாக்கம் உதிரிபாகங்கள் விலையில் எதிரொலிக்கும். இதன் காரணமாக பம்ப்செட் உற்பத்திக்கு கூடுதல் செலவு தேவைப்படும்.

இன்றைய சூழலில் குறு பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் கடனாளிகளாக மாறி வருகின்றனர். இந்நிலை நீடித்தால் பல குறுந்தொழில் நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படும் நிலை ஏற்படும். மூலப்பொருட்கள் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...