அவசர அழைப்புக்கு புதிய செயலி: பொதுமக்களின் பயன்பாட்டுக்கு “காவல் உதவி” செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

60-சிறப்பு பயன்பாடுகளுடன் இந்த காவல் உதவி செயலியில் இருப்பதாகவும், இதன் மூலம் மகளிர், சிறார்கள், முதியவர்கள் என யாராக இருந்தாலும், தங்கள் புகாரை அளிக்கலாம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக காவல்துறையின் “காவல் உதவி” என்ற புதிய செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தமிழக காவல்துறையில் பொதுமக்கள் - அவசர காலத்தில் தங்கள் புகார் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கும் வகையில், காவலன் என்ற செயலி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய “காவல் உதவி” என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி பயன்பாட்டிற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் “காவல் உதவி” செயலியை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறும்போது:-

இந்த காவல் உதவி செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் அவசர காலப் புகார்களை உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க முடியும், அதே போல் அவசர காலத்தில் சிறிய வீடியோவுடன் அவர்கள் இருக்கும் இடத்தையும் காண்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 60 சிறப்பு பயன்பாடுகளுடன் காவல் உதவி செயலியில் இருப்பதாகவும், இதன் மூலம் மகளிர், சிறார்கள், முதியவர்கள் என யாராக இருந்தாலும், தங்கள் புகாரை அளிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் தற்போதைய காவல் உதவி செயலி ஒரு புரட்சிகரமான முன்னேற்பாடு என்றும், ஏற்கனவே உள்ள காவலன் செயலியில் சுமார் 10 லட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், மேலும் 10 லட்சம் பேர் இணைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...