கோவையில் வடமாநில பெண்ணை அரைநிர்வாணப்படுத்தி கொடுமை - தட்டிக் கேட்டவர்களை நாயை விட்டு கடிக்க வைத்தவர் கைது….!

கோவையில் வடமாநில பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி கொடுமைபடுத்தியோடு, தட்டிக் கேட்ட அக்கம் பக்கத்தினரை நாயை விட்டு கடிக்க வைத்த நபரை சிறுமுகை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் வடமாநில பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி கொடுமைபடுத்தியோடு, தட்டிக் கேட்ட அக்கம் பக்கத்தினரை நாயை விட்டு கடிக்க வைத்த நபரை சிறுமுகை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஆலங்கொம்பு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் நாய்க்கு பயிற்சியளிக்கும் பணியை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த உதயகுமார், வட மாநிலத்தை சேர்ந்த சந்திரமணி என்ற திருமாண பெண்ணுடன் கடந்த மூன்று மாதங்களாக குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில், நேற்று உதயகுமார் தெருவில் வைத்துசந்திரமணியை அரை நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் உதயகுமாரிடம் கட்டிக் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த உதயகுமார் வீட்டில் இருந்த நாயை விட்டு, அங்கிருந்தவர்களை கடிக்க வைத்துள்ளார்.



இதில், நிவேதா (20) மற்றும் லத்திகா (10) என்ற சிறுமி படுகாயமடைந்தனர். அவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், தகலறிந்து வந்த சிறுமுகை போலீசார் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சந்திரமணியிடம் விசாரித்த போது, கடந்த மூன்று மாதங்களாக அவரை அடிக்கடி நிர்வாணப்படுத்தி அடித்து, அதை ரசித்து வந்ததாகவும், நாயை விட்டு கடிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் காயத் தழும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. 

சித்தரவதை தாங்க முடியாமல், சந்திர மணி அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளம் செல்வதாக கூறியதால், மேலும் அவரைகொடூரமாக தாக்கியதும் தெரியவந்தது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...