ஊழல் புகார் எழுந்துள்ள திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனை அமைச்சரைவில் இருந்து நீக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் அறப்போர் இயக்கத்தின் கிளை துவங்கப்பட்டது. இதனை அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் துவங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் முழுமையான இ-டென்டர் என்ற கோசத்துடன் இயக்கத்தின் நிகழ்வுகள் துவங்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம் வெங்கடேசன் கூறும் போது:-
அறப்போர் இயக்கம் கோவையில் இல்லை என்றாலும், கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு ஊழல்களை வெளிக் கொண்டு வந்துள்ளோம். குறிப்பாகமுன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது கடந்த ஆகஸ்ட் 9, லஞ்ச ஒழிப்புத் துறையினர்முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் அவர், மற்றும்அவருக்கு நெருக்கமானவர், சகோதரருக்குச் சொந்தமான நிறுவனங்கள் மூலம் பல ஒப்பந்தங்கள் எவ்வாறு எடுக்கப்பட்டது. முறைகேடாக அந்த ஒப்பந்தங்கள் மூலம் எவ்வாறு வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்தது எப்பதை ஆதாரத்துடன் புகார் அளித்தோம். இந்த புகார் அடிப்படையில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் மேலும் இரண்டாவது வழக்கு போடப்பட்டுள்ளது.
அதில் எஸ்.பி.வேலுமணி ரூ.58 கோடி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ.110 கோடி ரூபாய் வைப்புத்தொகை முடக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த வாரமும் சென்னையில் பேருந்து நிழல் கூறையில் செய்யப்பட்ட ஊழல்கள், குறிப்பாக கருப்புப் பணத்தை எவ்வாறு வெள்ளை பணமாக மாற்றி இந்த ஊழலில் ஈடுபட்டார்கள் என்பது குறித்தான ஆவணங்களைச் சேகரித்து புகார் அளித்துள்ளோம்.
இதேபோல் தொடர்ந்து அறப்போர் இயக்கம் சென்னையிலிருந்து செயல்பட்டு வந்தது. தற்போது கோவையிலும் ஒரு குழுவாக அமைத்து கோவையில் அன்றாடும் நடைபெறக்கூடிய ஊழல்களை வெளிக் கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு சாலை அமைப்பதற்கு முன்னர் செய்ய வேண்டிய நடைமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா ? என்பது குறித்தும் கூட இந்த குழு ஆய்வு செய்ய உள்ளனர்.
அதேபோல் குப்பை, தண்ணீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுக்கும் வகையில் கோவையிலிருந்து தன்னார்வங்களுடன் இணைந்து செயல்பட உள்ளனர்.அமைச்சர் அளவில் நடைபெற்ற ஊழல் மட்டுமல்லாமல் பஞ்சாயத்து அளவிலும் நடைபெறக்கூடிய ஊழல்களை வெளிக் கொணரும் வகையிலான பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
ஊழலுக்கு எதிராக போராடி அதில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதோடு இனிவரும் காலங்களில் ஊழல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மக்கள் இயக்கமாக அறப்போர் இயக்கம் செயல்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட துவக்க விழா மற்றும் திட்டமிடல் இன்று துவங்கியது என தெரிவித்தார்.ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இது குறித்து பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார். சென்னைக்கு அடுத்து முதல் மாவட்டமாக கோவை துவங்க உள்ளதாகவும், இதையடுத்துதிருச்சி, செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் அடுத்தடுத்த வாரங்களில் துவங்க உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஓராண்டாக கோவை மற்றும் பிற மாவட்டங்களில் செல்போன் மூலமாகவும் ஜூம் மீட்டிங் வாயிலாகவும் இங்கு இருக்கக்கூடிய தன்னார்வலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் என்னென்ன ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது, என்பதை எல்லாம் தன்னார்வலர்கள் சேகரித்துள்ளனர். அதை நிறைவு பெற்ற பிறகு இங்கு உள்ள ஒவ்வொரு மக்களும் அதை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடவுள்ளனர். 15 இடங்களில் அறப்போர் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,சென்னையை பிரதிபலிக்கும் வகையில் கோவை மாவட்டம் உள்ளது என தெரிவித்தார்.
இந்த அறப்போர் இயக்கத்தில்நேரடியாக வந்து பணியாற்ற முடியாத தன்னார்வலர்கள், இணையம் மூலமாகவும் அவர்களது பணிகளை செய்கின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் ஐடி ஊழியர்கள் வரை உள்ள தன்னார்வலர்கள் அறப்போர் இயக்கத்தில் இணைய முன்வந்துள்ளனர். மாவட்ட குழு 6 மாத காலத்தில் அமைக்க உள்ளனர்.
15 நபர்கள் கொண்ட மாவட்ட குழு அமைத்து, மாவட்ட குழு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அறப்போர் இயக்கம் இது வரை 15 புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையில் வழங்கியுள்ளோம். ஒரு சிலர் புகார் ஆரம்ப கட்டத்திலும், ஒரு சில புகார் விசாரணையிலும் உள்ளது. மொத்தம் 2 புகார்கள் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடவடிக்கை மிகவும் மெதுவாக உள்ளது.
கடந்த 10 மாதங்களில் சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழலை கண்டறிந்து 3 ஒப்பந்தங்களை ரத்து செய்ய வைத்துள்ளோம். தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஜெராட் கிஷோர் என்பவர் நியமித்துள்ளார். அவர் தனியார் நிறுவனத்திலேயே பணியாற்றியவர் பவர் சப்ளையர் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.
ஆனால் ஏற்கனவே இந்தத் துறை சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றிய கூடாது என்ற விதி இருக்கிறது. நேர்மையாளராகத் தான் இருக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. ஆனால் இவர் பணியாற்றிய நிறுவனம் ஏற்கனவே ரூ.900 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது என்ற புகார் இருக்கிறது. வங்கியிலிருந்து கடன் வாங்கி அதை வைப்பு நிதியாக வைத்து, அதன் மூலமும் பல்வேறு கடன்களை வாங்கி உள்ளனர்.
இந்த மாதிரி நிறுவனத்தில் பணியாற்றியவரை எவ்வாறு எடுக்கலாம் என அதற்கான ஆதாரங்களை எடுத்து புகார் அளித்தோம். இதன் விளைவாகக் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் தன் பணியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரை நாங்கள் ராஜினாமா செய்ய வைத்துள்ளோம். இதேபோல் தொடர்ந்து பல ஊழல்களை இந்த அரசியலும் கண்டறிந்து வருகிறோம். அதிமுகவில் அமைச்சர்கள் ஊழல் செய்தது போல், திமுகவின் ஊழல் செய்திருந்தால் இன்னும் சில மாதங்களில் அவை வெளிவரும். கண்டிப்பாக ஊழல் நடக்கிறது ராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது அலுவலகத்தில் வைத்து நடராஜன் என்பவர் ரூ.35 லட்சம் கையில் வைத்திருந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பிடிபட்டார்.
பணி உயர்வு பெற ரூ.5 லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வந்ததை அலுவலகத்திலிருந்தவர்கள் வாக்குமூலம் கொடுக்கிறார்கள் தெரிவித்துள்ளனர். ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினால் கைது செய்கிறார்கள், டி கே பாசு வழிகாட்டு நெறிமுறை உள்ளது அதில் ஒருவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தும் நிலையிலிருந்தால் அவரை கைது செய்யலாம் என தெரிவிக்கிறது. நடராஜனை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்திருக்க வேண்டும்.
ஆனால் கைது செய்யவில்லை என்றால் அமைச்சர் அளவிலிருந்து அவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அழுத்தம் வந்திருக்கும். இந்த லஞ்சப் பணம் வெறும் கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டும் போவது கிடையாது. அமைச்சர் தொடர்பு உள்ளதா? ஆணையருக்குத் தொடர்பு உள்ளதா? என விசாரணை செய்ய வேண்டும். அதிகாரிகளைப் போல் அமைச்சரைப் பணி மாற்றம் செய்துள்ளனர்.
வேறொன்றுமில்லை பணிமாற்றம் தண்டனை இல்லை அமைச்சராக இப்போது வரை அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாதா அதேபோல் அமைச்சர் மீது புகார் வந்துள்ள நிலையில் விசாரணை முடியும் வரையாவது அவரை அமைச்சரவையிலிருந்து விலக்கி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்து இருக்க வேண்டும். அதைக்கூட அரசு செய்யவில்லை. அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும், முழுமையான விசாரணை வேண்டும், நடராஜன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும், கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.