மிக அதிக வரி உயர்வு தொழில் துறையினருக்கு மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். எனவே தமிழக அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: சொத்துவரி உயர்வு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளைத் தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1,200 சதுரடி முதல் 1,800 சதுர அடி வரை 100 சதவீத வரி உயர்வும்.
1801 சதுர அடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 50 சதவீத சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களுக்கு 150 சதவீத வரி உயர்வும் கல்வி நிலையங்களுக்கு 100 சதவீத வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சொத்துவரி உயர்வு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு குறு, சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பான 'TANSTIA' துணைத்தலைவர், எஸ். சுருளிவேல் கூறியதாவது:-

கொரோனா நோய்தொற்று பரவல் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து தொழில்துறையினர் முழுமையாக மீண்டு வரவில்லை. குறிப்பாக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்கொண்டுள்ளன.
மூலப்பொருட்கள் விலை உயர்வு ஒட்டுமொத்த உற்பத்தி தொழில்துறையை ஸ்தம்பிக்க செய்துள்ளது. இத்தகைய நிலையில் தமிழ்நாடு அரசு சொத்து வரி உயர்வை மிக அதிக அளவு உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் 28 ஆண்டுகளுக்குப் பின் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் 12 ஆண்டுகளில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மிக அதிக வரி உயர்வு தொழில் துறையினருக்கு மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். எனவே தமிழக அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் 'TACT' தலைவர், ஜேம்ஸ் கூறியதாவது:-

தமிழக அரசு சொத்து வரி 150% சதவீதம் வரை உயர்த்தி உள்ளதால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படும். கடந்த இரண்டு வருடங்களாக தொழில்துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாலும் தொழிலாளிகள் வேலை இழப்புகளுக்கு ஆளாகியும், வியாபாரிகள் கடுமையானவீழ்ச்சி கண்டு உள்ளதாலும்
மக்களின் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இந்த நிலையில் வீட்டு வரி உயர்வால் நகர் பகுதியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குடியிருப்புகளுக்கான வாடகை உயர்த்தப்படும்.
இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். குடியிருப்புகள் மட்டுமின்றி வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் தொழில் துறையினருக்கும் வாடகை மிக அதிக அளவு உயர்த்தப்படும். எனவே நெருக்கடியில் உள்ள தொழில் துறையினருக்கு நிதி நெருக்கடி பிரச்சினை மேலும் அதிகரிக்கும். மக்களின் நலன் கருதி அரசு சொத்து வரி உயர்வைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.