'ஆட்டிசம்' -மனநோய் அல்ல, மன அழுத்தம் மட்டுமே.. கோவையில் உலக ஆட்டிச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

ஆட்டிசம் என்பது மனநோய் அல்ல, மன அழுத்தம் மட்டுமே, ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் முற்றிலும் குணப்படுத்தலாம் என விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


கோவை: உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு, இந்தியக் குழந்தைகள் மருத்துவ அகாடமி(IAP) மற்றும் இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு கிளை(TNSC) சார்பில், விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் மாசாணிக் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை நடந்தது.



இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு கிளை செயலாளர், டாக்டர் கே. ராஜேந்திரன் தலைமை வகித்து விழிப்புணர்வு நடைப்பயணத்தைத் துவக்கி வைத்தார்.

இந்தியக் குழந்தைகள் மருத்துவ அகாடமி, தமிழ்நாடு கிளை, தலைவர், டாக்டர். ஜெயவர்தனா கூறியதாவது:-

ஆட்டிசம் என்பது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. அதை அதிகரிக்கவே இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். ஆட்டிசம் என்பது மன நோய் அல்ல, மன அழுத்தம் மட்டுமே.

ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் அந்த குழந்தைகளை முற்றிலும் குணப்படுத்த முடியும். குறிப்பாக ஒன்றரை வயது முதல் இரண்டரை வயதுக்குள் குழந்தைகளின் நடவடிக்கைகளை வைத்து ஆட்டிசம் பாதிப்பு உள்ளதா என்பதைப் பெற்றோர்கள் கண்டறியலாம்.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தாமதமின்றி உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த குழந்தை விரைவில் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்.

பெரும்பாலான பெற்றோர் மூன்று அல்லது நான்கு வயதை கடந்த பின்னர் ஆட்டிசம் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களை அணுகி வருகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாகும்.

எங்கள் அகடமி சார்பில் இன்று ஒரு நாள் மட்டுமின்றி தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மக்களும் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடியாக மருத்துவர்களை அணுகி கேட்டு தெளிவு பெறலாம், தேவைப்படும் பட்சத்தில் சிகிச்சையும் உடனடியாக துவங்கலாம்.

இவ்வாறு டாக்டர் ஜெயவர்த்தனா தெரிவித்தார்.

இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி, தமிழ்நாடு கிளை, செயலாளர் டாக்டர். பவுசாமோல், பொருளாளர் டாக்டர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...