கோவை கிணத்துக்கடவு அருகே கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளி கைது - 950 கிராம் கஞ்சா பறிமுதல்..!

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு வடபுதூர் சாலையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளி கைது செய்து 950 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, வடபுதூர் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.



இதையடுத்து, அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்ஜீப்குமாரபுகாரி (30) என்பதும், இவர் கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருவதும் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, 950 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சஞ்ஜீப்குமாரபுகாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...