கோவையில் நீட் பயிற்சி மையத்தில் உயிரிழந்த மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

இது குறித்து கோவில்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் நீட் பயிற்சி மையத்தில் உயிரிழந்த மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் வன்கொடுமை வழக்காக பதிவு செய்யவும் பெற்றோர்கள் மனு அளித்தனர்.

கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி நீட் பயிற்சி மையத்தில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி சுவேதா (19) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கு அவரது நண்பர் யோகேஸ்வரனுடன் ஏற்பட்ட பிரச்சினையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கோவில்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியும், காவல்துறை முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸை சந்தித்து மனு அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில், தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கான எந்த ஆதாரம் இல்லை. சம்பவம் நடந்தவுடன் உடனடியாக தகவல் தெரிவிக்காமல் ஹாஸ்டல் வார்டன் இரண்டு மணி நேரம் கழித்து தகவல் கொடுத்தார்.

தாமதமாக தகவல் கொடுத்ததன் காரணம் என்ன? தற்கொலை செய்து கொண்ட அறை எதற்காக சுத்தம் செய்யப்பட்டது? இதனை வன்கொடுமை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சுவேதாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.



மனு அளிக்க வந்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் புலிகள் கட்சியினர் ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...