பொள்ளாச்சியில் தனிஷ்க் ஜுவல்லரியின் புதிய கிளை திறப்பு..!

பொள்ளாச்சி - கோவை சாலையில் தனிஷ்க் ஜுவல்லரியின் 45வது புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.



கோவை: டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜுவல்லரியின் புதிய கிளை பொள்ளாச்சியில் இன்று துவங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி - கோவை சாலையில் தனிஷ்க் ஜுவல்லரியின் 45வது புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.



இந்த புதிய கிளையை தனிஷ்க் ஜுவல்லரியின் ரீடெயில் தலைவர் விஜேஸ்ராஜன், தமிழக ரீடெயில் தலைவர் நரசிம்மன், அம்பாள் குரூப்ஸ் உரிமையாளரும், கிளை உரிமையாளருமான அசோகன் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதுகுறித்து, தனிஷ்க் ஜுவல்லரியின் ரீடெயில் தலைவர் விஜேஸ்ராஜன், தமிழக ரீடெயில் தலைவர் நரசிம்மன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்த நிறுவனம் டாடா நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். நாடு முழுவதும் 220 நகரங்களில் 385 கிளைகள் உள்ளன. தமிழகத்தில் 45 கிளைகள் உள்ளன. கோவை நகரில் 2 கிளைகளும் பொள்ளாச்சியில் இந்த புதிய கிளையும் செயல்படுகிறது.



3 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிசைன்கள் எங்களிடம் உள்ளன.



எக்ஸ்சேஞ்ச்க்காக வருபவர்களுக்கு 100 சதவீத தொகையைக் கொடுக்கிறோம்.



கிளை திறப்பின் அறிமுக சலுகையாக தங்க நகைகள் கிராமுக்கு ரூ.75 தள்ளுபடியும், வைர நகைகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.



தங்கத்தின் தரத்தை அறியும் கேரட் மீட்டர், தங்க நகைகளை சேமிக்கும் திட்டம், இலவச சேவை வசதிகள் உள்ளன.



தங்கம் நுகர்வில் தமிழகம் முதன்மையாக உள்ளது. எங்களது நிறுவனத்தின் 10 சதவீத விற்பனை தமிழகம் கொடுக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...