'வீட்ல இருக்கவே பயமா இருக்கு' - கோவையில் சிதிலமடைந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு: கலங்கும் ஹட்கோ பகுதிவாசிகள்..!

இதுகுறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் புதிய வீடுகள் கட்டுவது தொடர்பாக, அடுக்கு மாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.


கோவை: கோவையில் சிதிலமடைந்து வரும் அடுக்குமாடி குடியிருப்புகளால் ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு தரமாக புதுப்பிக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி, 52-வது வார்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சவுரிபாளையம் ஹட்கோ அடுக்குமாடி குடியிருப்பில் 528-குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

அதனைச் சரிசெய்வதற்காகத் தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவற்றை இடித்து விட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது சம்பந்தமாக ஏற்கனவே தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வருகை தந்து, இதுகுறித்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் சவுரிபாளையம் அடுக்குமாடி உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சவுரிபாளையம் ஹட்கோ அடுக்குமாடி உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுடன் (பி.எஸ்.ஜி.ஹட்கோ) கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் புதிய வீடுகள் கட்டுவது குறித்து அடுக்கு மாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...