கோவையில் தொடரும் 'கஞ்சா' விற்பனை: 2-பேர் கைது…!

இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.100-கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை வேலந்தாவளம் அருகே கூலித் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை வேலந்தாவளம் சோதனைச் சாவடி அருகே பட்டாம்பாறை, ரங்கசமுத்திரம் பகுதிகளில் கூலி தொழிலாளர்களை குறிவைத்து மர்ம நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் வேலந்தாவளம் சோதனைச் சாவடி அருகே உள்ள கிராமங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பட்டாம்பாறை அங்கே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களைச் சோதனை செய்தபோது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் பிச்சனூர் பட்டாம்பாறை பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (24), அவரது நண்பர் மணிகண்டன் (23) என்பதும் தெரியவந்தது.

மேலும் இருவரும் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி வந்து ரங்க சமுத்திரம் பகுதியிலுள்ள கூலி தொழிலாளர்களுக்கு அதனை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...