தொடரும் 'யானைகள் உயிரிழப்பு'... கோவை சிறுமுகை வனப்பகுதியில் இறந்து அழுகிய நிலையில் பெண் யானை சடலம் மீட்பு….!

மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் அழுகிய நிலையில் பெண் யானை சடலமாகக் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சிறுமுகை வனப்பகுதியில் இறந்து அழுகிய நிலையில் பெண் யானை சடலமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை அடர் வனப்பகுதியில் சிறுமுகை வனச்சரக வனவர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு இறந்து அழுகிய நிலையில் பெண் யானை உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் தொடர்ந்து யானைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமுகை வனப்பகுதியில் பவானி நீர்பிடிப்பு பகுதியில் பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்ட நிலையில்,மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் அழுகிய நிலையில் பெண் யானை சடலமாகக் கண்டறியப்பட்டுள்ள சம்பவம்சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை கோவை மாவட்ட வன அலுவலர், சிறுமுகை சரக வன பணியாளர்கள் மற்றும் மாவட்ட கால்நடை அலுவலர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் ஆகியோர்தன்னார்வலர்கள் முன்னிலையில் இருந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...