குறு சிறு நடுத்தர தொழில்களையும் பாதுகாக்கக் கோரி டாக்ட் சங்கம் சார்பில் மத்திய அரசிற்கு வேண்டுகோள்..!

வேலையின்மை அதிகரிக்கச் செய்து, நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக மாறும், பசி பட்டினி சாவுகள் அதிகரிக்கும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் கருத்து.


கோவை: குறு சிறு நடுத்தர தொழில்களையும் பாதுகாக்கக் கோரி டாக்ட் சங்கம் சார்பில் மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து டாக்ட் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் இரண்டு கண்கள் விவசாயம், தொழில்துறைகள். விவசாயிகள் தங்களை பாதுகாக்க விவசாயத்துக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் வங்க கோரி ஒரு ஆண்டுக்கு மேல் போராட்டம் நடத்தினார்கள். மேலும் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தொழில்துறை நிலை, விவசாயத்தை விட படும் மோசமான நிலையில் உள்ளது. ரூ.500, 1000 பண மதிப்பு இழக்க செய்தது, ஒரே நாடு ஒரே வரி GST அமுலாக்கம், கொரோனா தொற்று இவையாவும் MSME என்று சொல்லப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில்களை சுனாமியில் சிக்கியது போல் சூறையாடப்பட்டன.

நாட்டு மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கும் இந்த துறை குறித்து தேசத்தை வழிநடத்துகின்றவர்களால் கண்டு கொள்ளாமல் கைவிடப்பட்டவர்களாக இந்த தொழில் துறையினர் இருந்து வருகிறார்கள். பணமதிப்பிழப்பு பல லட்சம் குறு சிறு தொழில்கள் நடத்துகின்றவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

GST அமுலாக்கம் குறுந்தொழில்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றன. கொரானா பாதிப்பு அரசால் குறு சிறு தொழில்கள் கைவிடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, மூலப் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் குறிப்பிட்ட சில கார்ப்ரேட் நிறுவனங்கள் பல லட்சம் கோடிகள் லாபம் காண மூலப் பொருள்களின் விலையேற்றம் கண்மூடித்தனமாக உயர்த்தி கொள்ளை லாபம் பார்த்தன, பார்த்தும் வருகின்றனர். அரசு கண்மூடி கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றன.

நாடு முழுமையும் குறு சிறு தொழில் நடத்துபவர்கள் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் வங்கியாளர்களாளும், தனியார் நிதி நிறுவனங்கள் கந்துவட்டியாளர்களாலும் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள் தங்களுடைய இயந்திரங்களை இழந்தும் தங்கள் குடும்பங்கள் அவமானப்படுத்தத்தபடுவதாலும் செய்வது அறியாமல் புலம்பி வருகிறார்கள்.

மூலப்பொருள் விலையேற்றத்தால் ஆர்டர்கள் இல்லாமலும் கிடைக்கும் ஆடர்களுக்கு உரிய கூலி கிடைக்காமலும் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றார்கள். என்னதான் அரசு நினைக்கிறது. இந்த நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் இருந்தால் போதும் மற்றவர்கள் யாரும் வாழ்வதற்கு தகுதி அற்றவர்களாக நினைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்த அளவுக்கு இந்த அரசு குறு சிறு தொழில்களின் நிலைகளை கண்டுகொள்வதில்லை என்ற வேதனை தான் இந்த பதிவு அரசியல் சார்ந்த காழ்ப்புணர்ச்சியால் அல்ல கண்முன்னால் குறு சிறு தொழில் நடத்துகின்றவர் படும் துன்பத்தின் வெளிப்பாடு இந்த பதிவு.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி வரிகளையும் வராக் கடன்களை தள்ளுபடி செய்யும் அரசு இடம் இதோ நாங்கள் வைக்கின்ற கோரிக்கை 25 லட்சத்துக்கு கீழ் கடன் பெற்றவர்களின் கடனை தள்ளுபடி செய்யுங்கள். வங்கியில் கடன் கிடைக்கப்பெறாத குறுந் தொழில்களுக்கு தனி கடன் திட்டத்தை உடனே தாருங்கள்.

மானியத்துடன் நாட்டில் தொழில் சீராக நடத்துவதற்கு மூலப் பொருள்களின் விலையேற்றத்தை தடுக்க விலை நிர்ணய கமிட்டியை உடனடியாக அமைத்திடுங்கள். ஜிஎஸ்டியில் உள்ள குறைகளை நீக்க அரசு செவி கொடுத்து கேளுங்கள். நாட்டு மக்கள் நலமுடன் வாழ தொழில் துறை சிறந்து விளங்க கார்ப்ரேட் நிறுவனங்களை மட்டும் பார்க்காமல் நாட்டிலுள்ள குறு சிறு நடுத்தர தொழில்களையும் பாதுகாக்க அவசரம் அவசரமாக கவனிங்க இல்லை என்றால் குறு சிறு தொழில்களின் அடையாளங்கள் இழக்கப்படும்.

வேலையின்மை அதிகரிக்கச் செய்யும் நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக மாறும் பசி பட்டினி சாவுகள் அதிகரிக்கும். கடன் சுமை தாங்க முடியாமல் குறுந் தொழில் முனைவோர்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்படுவார்கள் அரசு கவனியுங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களே எங்கள் குறைகளைப் போக்க எங்கள் நிலைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துப் பேசுங்கள். ஆளும் கட்சி என்று சொல்லுகின்ற தொழில்துறை நண்பர்களே அரசு இடத்தில் உண்மையான தொழில் நிலையும், உங்கள் அமைப்புகள் மூலமாகவும் நீங்கள் சார்ந்த ஆளுங்கட்சி மூலமாகவும் கொண்டு செல்லுங்கள்.

இவ்வாறு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் டாக்ட் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...