'திருநங்கையர் தினம்'- ஆடல் பாடலுடன் கோவையில் அசத்தல்..!

இதில் திருநங்கைகளை 'வாழவிடு' என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.



கோவை: உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



இன்று உலக திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் கோவை மாவட்ட திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் (நடனம், கோலம், பேச்சுப்போட்டி, ஆடை அலங்கார அணிவகுப்பு, பாட்டுப் போட்டி) நடத்தப்பட்டன.



இதில் கலந்து கொண்ட 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பாரம்பரிய ஆடை அணிந்து அணிவகுப்பும் நடனமும் நடத்தினர். இதில் திருநங்கைகளை வாழவிடு என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.



முன்னதாக திருநங்கைகள் அவர்களது கோரிக்கைகளை அலுவலர்களிடம் முன்வைத்தனர். மேலும் பல்வேறு அரசுத் திட்டங்கள் தங்களுக்குக் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்நிகழ்ச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா முன்னிலையில் நடைபெற்றது.





Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...