உரிய பாதுகாப்பு வழங்க கோரி பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள, மாணவியர் விடுதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி பல்கலைக்கழக மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாணவியர் விடுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாணவியர் விடுதிக்குமர்ம நபர்கள் ஆயுதங்களுடன் உள்ளே சுற்றித் திரிவதாகக் கூறி, அங்கு தங்கியுள்ளமாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர்.
இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று இரவு மீண்டும் மாணவியர்விடுதிக்குள்5-மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அதில் ஒருவர் நிர்வாணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதனைக் கண்டித்து பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, திடீரென மருதமலை சாலைக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட மாணவிகள் உடனடியாக பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நேரில் வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து போலீசார் மாணவிகளைச் சமாதானப்படுத்தி மீண்டும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமர வைத்தனர். தகவலறிந்துஅங்கு வந்த பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போதுபெண்கள் அடங்கிய தனிக் குழுவைப் பாதுகாப்புக்கு நியமிப்பதாகவும், விடுதி வளாகத்தைச் சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார். அதுவரை விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டனர் மாணவிகளின் திடீர் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.