கோவையில் தனியார் தோட்டத்தில் பன்றி பண்ணை மற்றும் மனித கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் புகார்.!!

உரிய அனுமதியின்றி பன்றி பண்ணை மற்றும் மனித கழிவுகளை கொட்டி வரும் தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் தனியார் தோட்டத்தில் உரிய அனுமதியின்றி பன்றி பண்ணை மற்றும் மனித கழிவுகளை கொட்டி வரும் தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் விஷ்ணுராம் மோகன் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு அனுமதியின்றி பன்றி பண்ணை நடத்தி வருவதாகவும், மேலும் தோட்டத்திற்கு மனிதக் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து தோட்டத்திற்குள் விடுகிறார்கள் என அருகில் இருக்கும் மற்ற தோட்ட உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது:- பன்றி பண்ணை மற்றும் மனித கழிகளை அவரது தோட்டத்தில் கொட்டுவதால்சுகாதார சீர்கேடாக ஏற்படுவதோடு,இந்தக் கழிவு நீரால் அங்குதுர்நாற்றம் வீசுவதால் அருகில் வசிக்கும் மக்கள் பெரும் உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

இது சம்பந்தமாகப் பலமுறை அந்த தோட்ட உரிமையை உரிமையாளரிடம் தெரிவித்தபோது இனிமேல் இவ்வாறு நடக்காது என தெரிவிப்பார். ஆனால் தொடர்ச்சியாக இந்த மனிதக் கழிவுகளை அவரது தோட்டத்துக்குள் கொட்டி வருகிறார். அதேபோல இன்று கழிவுகளைக் கொட்ட வந்த லாரி சிறைபிடித்து லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்துகோபமடைந்த மக்கள் தோட்ட உரிமையாளரிடம் பேச முற்பட்டபோது அவர் பேசாமல் தவிர்த்துவிட்டதாகவும்,இதனைத் தொடர்ந்து மக்கள் ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் இடம் இது சம்பந்தமாக மனுகொடுத்துள்ளனர்.

இதற்கு முன்னரும் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்து இதுவரை எந்த பதிலும் இல்லை என்று மக்கள் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பக்கத்துத் தோட்டக்காரர் பெண்ணிற்குத் தகுந்த இழப்பீடு வாங்கித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...