முதல்கட்ட விசாரணையில் தூக்கக் கலக்கத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் மோதி இருப்பது தெரியவந்துள்ளது.
திருப்பூர்: கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த வாளையாற்றில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர்கள் இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
திருப்பூர் கூத்தம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் பாலாஜி மற்றும் முருகேசன் பனியன் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக வெளிநாட்டிலிருந்த வந்த முதலீட்டாளர்கள் பாலாஜியின் நிறுவனத்திற்கு வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு, முதலீட்டாளர்களைக் கேரளா மாநிலம், கொச்சின் நெடுமஞ்சேரியில் உள்ள விமான நிலையத்திற்கு வழியனுப்பச் சென்றுள்ளனர். பின்னர் பாலாஜி, முருகேசன், அவர்களது நண்பர்களான பதுருதீன், மைனுதீன் ஆகியோர் காரில் மீண்டும் திருப்பூர் நோக்கிச் சென்றுள்ளனர்.
அப்போது வாளையாறு ஆர்.டி.ஓ சோதனைச் சாவடி அருகே வந்த போது, சாலையில் ஓரத்தில் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியுள்ளார். இதில் காரின் முன்பகுதி முழுமையாகச் சேதம் அடைந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பாலாஜியும், முருகேசனும் உயிரிழந்தனர்.

பதுருதின் படுகாயம் அடைந்த நிலையில், மைனுதீன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.அங்கிருந்த பொதுமக்களும் சோதனை சாவடி ஊழியர்களும் அவர்களை மீட்டனர். பக்ரூதின் பலத்த காயங்களுடன் பாலக்காடுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறந்த பாலாஜி மற்றும் முருகேசன் ஆகிய இருவரது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகப் பாலக்காடு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துசம்பவம் குறித்து வாளையாறுபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் தூக்கக் கலக்கத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் மோதி இருப்பது தெரியவந்துள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.