அதிமுக கட்சியினரின் அலட்சியத்தால் டெங்கு கொசு உற்பத்தி கூடாரமாக மாறிய பராமரிப்பில்லாத தண்ணீீர் தொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டது.
கோவை: கோவை சேரன் மாநகரில் பத்தாண்டுகளாக அதிமுக கட்சியினரின் அலட்சியத்தால் டெங்கு கொசு உற்பத்தி கூடாரமாக மாறிய பராமரிப்பில்லாத தண்ணீர் தொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கவுன்சிலர் கோவை பாபு உத்தரவின் பேரில் சுத்தம் செய்யப்பட்டது.
கோவை விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன் மாநகர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதி.
இங்கு ஏ,பி,சி என மூன்று பிரிவுகளில் மொத்தம் 568 தனித்தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சேரன்மாநகர் முதல் பஸ் ஸ்டாப் அருகே பராமரிப்பில்லாத தண்ணீர் தொட்டி வேலி அமைக்கப்பட்ட இடத்தில் இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக் காலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்த காரணத்தால் அந்த தண்ணீர் தொட்டி அமைந்துள்ள பகுதி முழுவதும் புதர் மண்டி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. மழைக்காலத்தில் டெங்கு கொசு பரவல் சேரன் மாநகர் பகுதியில் அதிகம் இருந்தது.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட போதிலும் சேரன்மாநகர் குடியிருப்பு பகுதி முதல் பஸ் ஸ்டாப் அருகே அமைந்துள்ள பராமரிப்பில்லாத தண்ணீர் தொட்டி பகுதி மட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
டெங்கு கொசு பரவல் சேரன்மாநகர் முதல் பஸ் ஸ்டாப் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகம் ஏற்பட்டதற்கு இந்த பராமரிப்பில்லாத தண்ணீர் தொட்டி அமைந்துள்ள இடம் முக்கிய காரணமாகும்.
சமீபத்தில் அந்த இடத்தை முழுவதும் சுத்தம் செய்ய கோவை மாநகராட்சி 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு நடவடிக்கை மேற்கொண்டார். தூய்மை பணி மேற்கொண்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் தண்ணீர் தொட்டி அமைந்துள்ள சிறிய இடத்தில் 4 டிராக்டர்களில் கழிவுகளை அள்ளி செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.
இவை தவிர, முட்புதர்கள் அனைத்தையும் அகற்றி பார்த்தபோது பராமரிப்பில்லாத தண்ணீர் தொட்டி டெங்கு கொசு உற்பத்தி கூடாரமாக மாறி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கவுன்சிலர் கோவை பாபு நடவடிக்கை காரணமாக தற்போது அந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு நல்ல முறையில் காட்சியளிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கவுன்சிலர் கோவை பாபு கூறுகையில்,
சேரன்மாநகர் முதல் பஸ் ஸ்டாப் அருகே பராமரிப்பில்லாத தண்ணீர் தொட்டி அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் நோய்த் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ள இடத்தை பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தூய்மைப் பணியை மேற்கொள்ள நான் உத்தரவிட்டேன்.
நாங்கள் எதிர்பார்த்தது போலவே அந்த இடத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்டபோது டெங்கு கொசு உற்பத்தி கூடாரமாக பராமரிப்பில்லாத தண்ணீர் தொட்டி காட்சியளித்தது கண்டறியப்பட்டது. தவிர அந்த வளாகம் முழுவதும் புதர்கள் சுத்தம் செய்யப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் மிகவும் தூய்மையாக காட்சியளிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாக்கடை கால்வாய், ரோடு மற்றும் குப்பை கழிவுகள் அகற்றுதல் என்பது உள்ளிட்ட எந்த பணிகளும் திறம்பட மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் காட்டிய அலட்சியம் காரணமாக தற்பொழுது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
வார்டு கவுன்சிலராக பொறுப்பேற்ற நாள் முதல் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறேன். எதிர்வரும் நாட்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும். இருபத்தி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் படிப்படியாக தீர்வு காணப்படும்." என்றார்.