கோவையில் சமுதாய உரிமை வழங்குவது குறித்தான விழிப்புணர்வு கூட்டத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து நடனமாடிய மாவட்ட ஆட்சியர்..!

மாவட்ட ஆட்சியர் நடனமாடியது அங்குள்ள அனைத்து பழங்குடியின மக்களையும், அரசு அலுவலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



கோவை: கோவையில் சமுதாய உரிமை வழங்குவது குறித்தான விழிப்புணர்வு கூட்டத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் நடனமாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் செம்பாரைபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சேத்துமடஜ் பழங்குடியினர் கிராமத்தில் செம்பாரை பாளையம், நெல்லித்தொரை, வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்ட 26 வன கிராமங்களில் சமுதாய உரிமை வழங்குவது குறித்தான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 19 கிராம சபை குழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



இந்த கூட்டத்தில் மலை கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அங்கன்வாடி, பொது வழி, மருத்துவமனை, கோவில் பயன்பாட்டிற்கு தேவையான நிலங்களை வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து சமுதாய உரிமை வழங்கிடவும், வனப்பகுதியில் வன கிராம மக்களின் பொருளாதாரம் மேம்பட தேன் சேகரிக்கவும் குச்சி எடுப்பது இது போன்ற தொழில் செய்வதை ஊக்குவிக்கவும் வனத்தை பாதுகாப்பது குறித்தும் பல கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ரேஞ்சர், கோட்டாட்சியர் வட்டாட்சியர் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரை வரவேற்கும் பொருட்டு பழங்குடியின மக்கள் அவர்களது பாரம்பரிய இசையை வாசித்து நடனம் ஆடினர். அப்பொழுது மாவட்ட ஆட்சியரும் அவர்களுடன் இணைந்து நடனமாடினார். இது அங்குள்ள அனைத்து பழங்குடியின மக்களையும் அரசு அலுவலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...