கோவை கிணத்துக்கடவு அருகே மன விரக்தியில் இருந்த முதியவர் 'சாணி பவுடர்' குடித்து தற்கொலை.!

கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில் மன விரக்தியிலிருந்த முதியவர் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையத்தில் மன விரக்தியிலிருந்த முதியவர் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் புது காலனி பகுதியில் வசித்து வந்தவர் கணேசன் (வயது 67). இவரது மனைவி எலும்பு முறிவு ஏற்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் மன விரக்தியிலிருந்த கணேசன் நேற்று இரவு வீட்டில் தண்ணீரில் சாணி பவுடர் கலந்து குடித்து மயக்க நிலையிலிருந்துள்ளார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் கணேசனை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் கணேசனைப் பரிசோதனை செய்ததில் கணேசன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இறந்த கணேசனின் மகள் சாந்தி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...