இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் இளைஞர் படுகாயம் அடைந்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (24). இவர் நேற்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரை பின்னால் அமர வைத்து கோவில்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, கோவில்பாளையம் பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையை நாகராஜ் கடக்க முயன்ற போது பொள்ளாச்சியிலிருந்து கோவில்பாளையம் நோக்கி வந்த இருசக்கர வாகனம் நாகராஜ் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நாகராஜுக்கு தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.