கோவையில் அதிகரிக்கும் 'கஞ்சா' விற்பனை: இருவேறு இடங்களில் விற்பனை செய்த இருவர் கைது.!!

கோவை மதுக்கரை, கே.ஜி.சாவடி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2-பேரை போலீசார் கைது செய்து, 2.4-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக குட்கா மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து மதுக்கரை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீஸார் அறிவொளி நகர் பண்ணாரி அம்மன் கோயில் அருகே ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ரவிச்சந்திரன் (56) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் சுமார் 1.2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கோவை கே.ஜி சாவடி பிச்சனூர் மாகாளியம்மன் கோயில் அருகே கேஜி சாவடி உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்றிருந்த பாபு (55) என்பவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

மேலும் இதை உள்ளூரில் உள்ள மக்களுக்கு சிறிய சிறிய பொட்டலங்களாக தாயரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...