கோவை கிணத்துக்கடவு பகுதியில் ‘கஞ்சா’ விற்பனை அமோகம்: வடமாநில தொழிலாளி கைது.!!

900-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் வடமாநில தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் முத்து, ஜோசப் உள்ளிட்ட போலீசார் கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பழைய செக்போஸ்ட் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து சோதனை செய்தபோது அவர் கையில் வைத்திருந்த மஞ்சள் பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்து விசாரணை செய்ததில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிசர் பிராய் (24)என்பதும் இவர் கோவை கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருவதாகவும், கள்ளப்பாளையம் பகுதியில் மொத்தமாகக் கஞ்சா வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதியில் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த 900-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...