கோவை மதுக்கரை அருகே மளிகைக் கடையில் வைத்திருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்..!

இதையடுத்து, கடை உரிமையாளரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சிவக்குமார் (47) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மதுக்கரை பாலத்துறை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 20 கிலோ குட்கா பொருட்களை மதுக்கரை போலீசார் பறிமுதல் செய்து மளிகை கடை உரிமையாளரை கைது செய்தனர்.

கோவை மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, கோவை மதுக்கரை, பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பாலத்துறை பகுதியில் உள்ள சிவானந்தம் (47) என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் சோதனை மேற்கொள்ள போலீசார் சென்ற போது, கடை உரிமையாளர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து, அவரை மடக்கிப் பிடித்த போலீசார் உள்ளே சென்று சோதனை செய்த போது கடையில் சுமார் 20.6 கிலோ தமிழக அரசால் தடை குட்கா பெருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



இதே போல, க.க.சாவடி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்ட போது அங்கு சுமார் 18 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடை உரிமையாளரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சிவக்குமார் (47) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...