கோவை மாவட்டத்தில் அறப்போர் இயக்கம் வரும் ஞாயிறன்று துவக்கம்

கோவை மாநகராட்சி மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நடக்கும் அனைத்து ஊழல்களையும் வெளிக் கொண்டுவர நடவடிக்கை.


கோவை: கோவை மாவட்டத்தில் அறப்போர் இயக்கத்தின் குழு வரும் ஞாயிற்றுக்கிழமை துவக்கப்படுகிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது அறப்போர் இயக்கம். ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்த இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குழுக்கள் அமைத்து செயல்பட முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், முதல் மாவட்டக்குழு கோவையில் வரும் ஞாயிற்றுக்கிழமை துவக்கப்படுகிறது.

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் கூறியதாவது:-

நாங்கள் கடந்த ஏழு வருடங்களாக சென்னையில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்களை வெளிக் கொண்டு வந்துள்ளோம். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்து செயல்பட முடிவு செய்து, முதல் கட்டமாக வரும் ஞாயிற்றுக்கிழமை கோவையில் அறப்போர் இயக்கத்தின் மாவட்ட குழு துவக்க உள்ளோம்.

கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்த ஊழல் உட்பட பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டு வந்துள்ளோம்.

கோவை மாவட்டத்தில் குழுக்கள் அமைத்து செயல்பட உள்ள காரணத்தால் எதிர்வரும் நாட்களில் மழைநீர் வடிகால், குப்பை அகற்றுதல் என்பது உள்ளிட்ட மக்கள் தொடர்புடைய அனைத்து அத்தியாவசிய பணிகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து வெளிக்கொண்டு வருவோம்.

அதேபோல், கோவை மாநகராட்சி மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நடக்கும் அனைத்து ஊழல்களையும் வெளிக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வோம்.

இதுதவிர நீர்நிலைகள் மீட்டெடுப்பது, அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த உதவி என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

கோவையை தொடர்ந்து அடுத்த வாரம் திருச்சியில் மாவட்ட குழு துவங்க உள்ளோம். படிப்படியாக பல்வேறு மாவட்டங்களிலும் குழுக்களை துவக்கி செயல்பட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...