வால்பாறை நகராட்சி மூலம் ரூ.80 லட்சம் செலவில் கட்டிவரும் குடி தண்ணீர் தொட்டியை எம்எல்ஏ அமுல் கந்தசாமி நேரில் ஆய்வு..!

மேலும், பி ஏ பி காலனியில் ரூ.5 கோடி செலவில் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் பொட்டானிக்கல் பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டார்.


கோவை: வால்பாறை நகராட்சி மூலம் ரூ.80 லட்சம் செலவில் கட்டிவரும் குடி தண்ணீர் தொட்டியை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பார்வையிட்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக, வால்பாறை கூட்டுறவு காலனியில் ரூ.80 லட்சத்திற்கான இரண்டு குடிநீர் தொட்டி கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்த பின் வால்பாறை பகுதியில் வாழும் பொது மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஒருபோதும் ஏற்படாதவாறு ஒவ்வொரு தொட்டியும் இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும்.

இந்த தண்ணீர் தொட்டி பணிகள் நடந்து வருவதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த நகராட்சி பொறியாளரிடம் பொது மக்களுக்கு எந்த வகையிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு மிக விரைவாக சிறப்பான முறையில் பணிகளை முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.



பின்னர், பி ஏ பி காலனியில் ரூ.5 கோடி செலவில் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் பொட்டானிக்கல் பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், பூங்காவை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிருபர்களிடம் கூறினார்.

முன்னதாக, அவர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, அங்கு மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் கட்டும் இடத்தை பார்வையிட்டார். அவருடன் அண்ணா திமுக நகர செயலாளர் மயில் கணேசன், துணை செயலாளர் பொன் கணேஷ், சுடர் பாலு, சவுந்தர்ராஜ், செல்.கணேஷ், பாலு, சசி, லோகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...