நகராட்சிக்கு சுமார் ரூ.6 கோடி வாடகை பாக்கி உள்ளதாகவும் தற்போது வரை ரூ.3 கோடியே 50 லட்சம் வரவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்.
கோவை: கோவை வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு சொந்தமாக 300 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு 2018ம் ஆண்டில் இருந்து தற்போது வரை கடை வாடகை நகராட்சிக்கு கட்டாத காரணத்தினால் வாடகை செலுத்துவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது வரை வாடகை யாரும் கட்டாத சூழ்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 20க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து சீல் வைக்கப்பட்டது. அதன் பின் வாடகை செலுத்தாத கடைகள் நகராட்சிக்கு வாடகை செலுத்தப்பட்ட சூழ்நிலையில் இன்று வரை 32 கடைகள் வரை பணம் செலுத்தவில்லை.

இதனால், நகராட்சி ஆணையர் வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் பாதுகாப்பில் 32 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சுமார் 6 கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளதாகவும் தற்போது வரை 3 கோடியே 50 லட்சம் ரூபாய் வரவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதி உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தற்போது வரை வாடகை செலுத்தாத கடைகள் 32 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.