கோவை ரத்தினபுரி பகுதியில் குடிபோதையில் தொழிலாளி அடித்துக் கொலை - இளைஞர் கைது..!

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வரமறுத்ததால் 52 வயது தொழிலாளியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ரத்தினபுரி அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வரமறுத்ததால் 52 வயது தொழிலாளியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிச்சாமி, தொழிலாளியான இவர் வழக்கமாக அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் டாஸ்மாக் அருகே மது அருந்திவிட்டு இருந்த போது, கண்ணப்பநகரை சேர்ந்த ஶ்ரீ விஷ்ணு என்ற இளைஞரும் மது போதையில் அங்கு வந்து பழனிச்சாமியுடன் பேசி உள்ளார்.

அப்போது, ஶ்ரீவிஷ்ணு, பழனிச்சாமியை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. பழனிச்சாமி மறுத்ததால் அவரை ஶ்ரீ விஷ்ணு கல்லால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பழனிச்சாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து ஶ்ரீ விஷ்ணுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...