கோவை கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ அடிப்படை வசதிகள்‌ ஏற்படுத்திட வேண்டி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோரிக்கை..!

மாணவர்களின்‌ எதிர்காலத்தைக்‌ கருத்தில்‌ கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிட ஆவன செய்திட வேண்டுமென்று கோரிக்கை.


கோவை: கோவை கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ அடிப்படை வசதிகள்‌ ஏற்படுத்திட வேண்டி சிறுபான்மை ஆணையத்‌ தலைவருக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவையின்‌ மையப்பகுதியான கோட்டைமேட்டில்‌ அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ தற்போது 809 மாணவ-மாணவிகள்‌ பயின்று வருகிறார்கள். இவர்களில்‌ 300 பேர்‌ மாணவியர்கள்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை மாணாக்கர்களைக்‌ கொண்ட இந்தப்‌ பள்ளியில்‌ அடிப்படை வசதிகளின்‌ குறைபாட்டால்‌ அவர்கள்‌ கல்வி கற்பதில்‌ மிகுந்த சிரமம்‌ ஏற்படுகிறது. இந்தப்‌ பள்ளியில்‌ கீழ்க்காணும்‌ அடிப்படை வசதிகள்‌ ஏற்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது.

1. பள்ளியில்‌ 8092 மாணவர்களை அமர்த்துவதற்கான போதிய வகுப்பறைகள்‌ இல்லாததால்‌, மாணவர்களுக்கு சுழற்சி முறையில்‌ கல்வி கற்கும்‌ சூழல்‌ தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையினை மாற்றிட தற்போதுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கு குறைந்தது 8 கூடுதல்‌ வகுப்பறைகள்‌ ஏற்படுத்தப்பட வேண்டும்‌.

2. பள்ளி வளாகத்தில்‌ இரண்டு கழிப்பறைகள்‌ மட்டுமே உள்ளதால்‌ மாணவர்களை வரிசைப்படுத்தி இடைவேளைக்கு அனுப்பவேண்டிய சூழல்‌ நிலவுகிறது. மாணவியர்கள்‌ அதிக எண்ணிக்கையில்‌ இருக்கும்‌ நிலையில்‌ அவர்களுக்காக தனியாக கழிப்பறைகள்‌ அமைப்பதுடன்‌, மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு என கழிவறை வசதிகள்‌ ஏற்படுத்திட வேண்டும்‌.

3. இத்தனை மாணவர்களைக்‌ கொண்ட இந்தப்‌ பள்ளியில்‌ குடிநீர்‌ வசதி இல்லை. மாநகராட்சியின்‌ குடிநீர்‌ இணைப்பு வழங்கிடவும்‌, தண்ணீர்‌ தொட்டி அமைத்து குடிநீர்‌ வசதி ஏற்படுத்திடவும்‌ வேண்டும்‌

4. பள்ளியின்‌ வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள 7 அங்கன்வாடி கட்டிடங்கள்‌ 40 வருட பழமையானவை. இவற்றை அகற்றிவிட்டு புதிய ஒன்றிணைந்த அங்கன்வாடி வளாகம்‌ அமைப்பதுடன்‌, பள்ளியின்‌ கட்டிடங்களையும்‌ சீரமைத்திட வேண்டும்‌.

5. பள்ளி வளாகத்திற்கு வழங்கப்பட்டுள்ள மின்‌ இணைப்பு மிகப்‌ பழமையானது. இதனால்‌ அடிக்கடி மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி வரும்‌ நிலை உள்ளது. ஆதலால்‌ அனைத்து வயர்களும்‌ மாற்றிடவும்‌, மின்சார விளக்குகள்‌ மற்றும்‌ மின்விசிறிகள்‌ அமைத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌.

6. இந்தப்‌ பள்ளியினை மேல்நிலைப்பள்ளியாக தரம்‌ உயர்த்திடவும்‌ அதற்கு ஏற்றார்போல்‌ உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திடவும்‌, கூடுதல்‌ ஆசிரியர்களை நியமித்திடவும்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌.

மேற்கூறிய அடிப்படைத்‌ தேவைகளை ஏற்படுத்துவதன்‌ மூலம்‌ இங்கு பயின்று வரும்‌ ஏழைக்‌ குழந்தைகளுக்கு கல்வி தடையின்றி கிடைத்திடவும்‌ அவர்களின்‌ எதிர்காலத்தை சிறப்பானதாக உருவாக்கிடவும்‌ உதவியாக இருக்கும்‌. எனவே, இந்த மாணவர்களின்‌ எதிர்காலத்தைக்‌ கருத்தில்‌ கொண்டு இந்தக்‌ கோரிக்கைகளை நிறைவேற்றிட ஆவன செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல, கோவை உக்கடம்‌ ஆரம்ப சுகாதார நிலையத்தினை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டி, சிறுபான்மை ஆணையத்‌ தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கரும்புக்கடை பகுதியில்‌ தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வேண்டியும், இந்த பகுதியில்‌ ஒரு அரசு மேல்நிலைப்‌ பள்ளியை அமைத்து மாணவர்களின்‌ கல்விக்கும்‌ எதிர்காலத்திற்கும்‌ உதவிட வேண்டும்‌ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...