3-பேரை கைது செய்த பொள்ளாச்சி மேற்கு போலீசார், அவர்களிடமிருந்து 74-கிலோ குட்கா, ரூ.1-லட்சம் பணம் மற்றும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும், பறிமுதல் செய்தனர்.
கோவை: கேரளாவிலிருந்து பொள்ளாச்சிக்கு சட்டவிரோதமாக விற்பனைக்குக் கொண்டு வந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர்.
தமிழகத்தில் குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்துள்ள அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து, சிலர் சட்டவிரோதமாக குட்கா பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று குமரன் நகர் மற்றும் நேதாஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையின் போது, அங்கு வந்த கார் ஒன்றை சோதனை செய்ததில், அதில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், வாகனத்திலிருந்தவர்கள் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ்(30), பொள்ளாச்சி சேர்ந்த பக்ருதீன்(29) மற்றும் ராஜேஷ்(40) ஆகியோர் என்பதும், இவர்கள் கேரளாவிலிருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து பொள்ளாச்சியில் விற்பனை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது.
பின்னர் 3 பேரையும் கைது செய்த பொள்ளாச்சி மேற்கு போலீசார், அவர்களிடமிருந்து ரூ.65 ஆயிரம் மதிப்பிலான 74 கிலோ குட்கா, ரூ.1 லட்சம் பணம் மற்றும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும், பறிமுதல் செய்தனர்.