சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 4ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 8 வாக்குகள் பெற்ற வனிதாவை தலைவராக அறிவித்தது.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தலைவர் தேர்தலில், நீதிமன்ற உத்தரவின்படி இன்று தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. கடந்த 4ம் தேதி பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் தலைவர் பதவிக்கு ராகினி அறிவிக்கப்பட்டார். ஆனால், போட்டி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த வனிதா வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது வனிதா 8 வாக்குகளும், ராகினி 7 வாக்குகளும் பெற்றனர்.
இந்நிலையில், அங்கு வந்த ராகினியின் தந்தை வாக்கு சீட்டை கிழித்து சேதப்படுத்தினார். இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து, வனிதா பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்தக்கூடாது. 8 வாக்குகள் பெற்ற தன்னை தலைவராக அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு தலைவர் பதவியை அறிவிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து மறைமுக தேர்தலின்போது பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்கள் அடிப்படையில் வனிதாவை தலைவராக அறிவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராணி முன்னிலையில் தலைவர் பதவி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், இந்த கூட்டத்தில் 15 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அப்போது நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி 8 வாக்குகள் பெற்ற வனிதா தலைவராக அறிவிக்கப்பட்டார்.